தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து ::நீரிழிவு நோய்க்கான மூலிகைகள்
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் மாவுச்சத்து வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் குறைபாடாகும். இது பொதுவாக பரம்பரையாக அல்லது இன்சுலின் சுரப்பு இல்லாமை அல்லது இன்சுலின் சரியாக உபயோகபடுத்தாதலால் ஏற்படும். இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது அதிக தாகம், உடல் எடை இழப்பு, காலப்போக்கில் சிறு இரத்தக்குழாய்களை பாதித்து தொற்று, கைகால் அழுகல், பார்வையின்மை, மறதி, சிறுநீரக நோய் ஏற்படுத்தலாம். மூலிகைகள் உடலில் உள்ள அசுத்தத்தை அகற்றி, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம் செய்யும் போது உடலுக்க்கு வலுவையும் தருகின்றது.

நீரிழிவு நோய்க்கான சில மருத்துவ குண மூலிகைகள்

வெந்தயம்
உணவு செரிமானத்தின் போது வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சர்க்கரை உடலில் சேரும் வேகத்தை குறைத்து பாங்கிரியாடிக் செல்கள் இன்சுலின் சுரப்பதற்கு உதவுகின்றது.

வெந்தயம் உலகில் இந்தியா, ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மிதமான வறட்சி பகுதிகளிலும் வளரக்கூடியது. இதன் நறுமணம் மற்றும் சுவைக்கான விரும்பப்படுகிறது.

வெந்தயம்

துளசி
துளசி சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க கூடியது.

இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 - 4) எடுத்துக் கொள்ளலாம்.

துளசி

கற்றாழை
கற்றாழை அதிகாலையில் உணவு உண்பதற்கு முன் உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன் உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன் உட்கொள்வதால் இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கின்றது.

கற்றாழை

நெல்லிக்காய்
நெல்லி உடலின் தடுப்பாற்றல் சக்தியை அதிகரித்து நலனை காக்கும் சிறப்புமிக்க உணவாகும்.
இதில் வைட்டமின் சி -யின் சிறந்த மூலமாகும், ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும் விளங்குகின்றது.

நெல்லிக்காய்
 

பொன் கொரண்டை
இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும் மற்றும் குறைக்கும் கூறுகள் உள்ளது. இது சர்க்கரை நோய் சிகிச்சையில் பெறும் பங்கு வகிப்பதால் இந்தியாவில் பரவலாக பயன்படுகின்றது.

 
பொன் கொரண்டை

அஸ்வகாந்தா
மன அழுத்தம் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக இருப்பதால், அஸ்வகாந்தா மன அழுத்தம் மற்றும் மனக்கவலை ஏற்படுவதிலிருந்து காக்கின்றது.

இது சர்க்கரை அளவை குறைப்பதில் சிறந்து விளங்குவதோடு உடல் ஊட்டத்திற்கு சிறந்ததாக விளங்குகின்றது.

அஸ்வகாந்தா
 

வேங்கை
வேங்கையின் பட்டை பொடியாக்கி மருந்தாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இரத்தத்தில் சர்க்கரை குறைக்கும் இயல்பு வேங்கையில் உள்ளது.

 
வேங்கை

வில்வம்
உலர்ந்த வில்வ இலையினை கொண்டு செய்த பொடி இயல்பாகவே இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

வில்வம்
 

ஆவாரை
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகைப் போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

பொதுவாக இது தோல் பிரச்சனைக்கு சிறந்தது. வேதகாலத்திலிருந்தே இதன் மருத்துவத்தன்மைக்கு புகழ்பெற்றது. ஆவாரையில் வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலீன் சுரப்பை மேம்படுத்தலாம்.

ஆவாரை

வேம்பு
வேம்பு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியாகவும் அழற்றி நீக்கியாகவும், இரத்த்ததில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், மலேரியாவௌ எதிர்க்கவும், பாக்டீரியா எதிர்ப்பியாகவும், நச்சுயிர் எதிர்ப்பியாகவும், ஆக்சிஜனேற்றத் தடுப்பானகவும், நீரிழிவு எதிர்ப்பியாகவும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பியாகவும்  விளங்குகின்றது. வேம்பு மூலிகை மருத்துவத்தில் சிறந்த மருந்தாக விளங்குகின்றது. இதில் சிரந்த மருத்துவ குணம் மற்றும் உடல் நலத்திற்கான நன்மைகளாகவும் உள்ளன.

வேம்பு
 

நாவல்பழம்
நாவல்பழத்தின் கொட்டை மற்றும் கொட்டையின் பொடி நீரிழிவு கட்டுப்படுத்துவதற்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றது. நாவல் இரும்புசத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு இருதயம் மற்றும் கல்லீரல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகின்றது.

 
நாவல்பழம்

நித்யகல்யாணி
நித்யகல்யாணி மறதி நோய்க்கு சிறந்த மருந்தாகும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தினை தனிப்பதால் நீரிழுவிற்கும் சிறந்த மருந்தாக விளங்குகின்றது. மன அழுத்தம் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடுகளை  / இடையூருகளை ஏற்படுத்துவதால் சர்க்கரை அளவை அதிகரித்து சிறுநீர் வழியாக சர்க்கரையை வெளியேற்றுகிறது.

நித்யகல்யாணி
பூண்டு
பூண்டு நீரிழிவிற்கு சிறந்த மருந்தாகும். பூண்டில் உள்ள "அலிசின்" சர்க்கரை அளவை குறைக்கின்றது. மேலும் இது கொழுப்பு படியாமல் பாதுகாக்கின்றது.
 
பூண்டு

மஞ்சள்
மஞ்சள் புற்றுநோயை அகற்றி மற்றும் நீரிழிவிற்கு எதிராக செயல்படக்கூடியது.

மஞ்சள்

கனோலி
கனோலி கல்லீரலில் நச்சுவை நீக்கி பாதுக்கக்கின்றது. இது இரண்டாம் வகையை சார்ந்த நீரிழிவிற்கு சிறந்தது. கனோலி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கக்கூடியது.        

கனோலி
ஆதாரம் :

WWW.PLANETAYURVEDA.COM

 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015